Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: செலவீ ன விபரங்களை இருநாட்களுக்கு ஒருமுறை தாக்கல் செய்ய அறிவுறுத்தல்

In இந்தியா
Updated: 06:19 GMT, Mar 30, 2017 | Published: 06:17 GMT, Mar 30, 2017 |
0 Comments
1150
icon_com
This post was written by : Elakkiya
201703300551557930_Election-observers-are-instructed-to-file-the-accounts-of_SECVPF

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தேர்தல் செலவு கணக்கு விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆர்.கே நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பொதுப் பார்வையாளர் பிரவீன் பிரகாஷ் மற்றும் செலவின பார்வையாளர் அபர்ணா வில்லூரி ஆகியோர் மேற்படி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிடும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள், பதிவுபெற்ற கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 62 பேரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முறையாக பின்பற்றி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தேர்தல் பிரசாரத்தின் போது பணம் வழங்கப்படுகின்றதா என்பதை கண்காணித்து தகவல் வழங்கலாம் என்றும் தேர்தல் அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் வேட்பாளர்களுக்கான தேர்தல் ஆணைய அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg