Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முடிவுக்கு வந்தது விமலின் உணவு தவிர்ப்பு போராட்டம்

In இலங்கை
Updated: 06:01 GMT, Mar 30, 2017 | Published: 05:49 GMT, Mar 30, 2017 |
0 Comments
1251
icon_com
This post was written by : Varshini
wimal-weerawansa-01-psd

சிறைச்சாலையில் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, இன்று (வியாழக்கிழமை) தமது போராட்டத்தை நிறைவுசெய்துள்ளார்.

உண்ணாவிரதத்தை கைவிடுமாறு பௌத்த குருமார் கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக விமல் இத் தீர்மானத்தை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வாகன மோசடி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச, தமக்கு பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 21ஆம் திகதிமுதல் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வந்தார்.

கடந்த 26ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனமதிக்கப்பட்ட விமல் வீரவன்ச நேற்றைய தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளார்.

விமலின் வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg