Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேனியில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கப்படும்: மத்திய அரசு உறுதி

In இந்தியா
Updated: 08:02 GMT, Mar 30, 2017 | Published: 06:44 GMT, Mar 30, 2017 |
0 Comments
1271
icon_com
This post was written by : Elakkiya
PW-2015-03-24-Padma

தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் (Neutrino Laboratory) அமைக்கும் திட்டத்தை வேறு மாநிலத்திற்கு மாற்றுவதற்கான திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

பல்வேறு எதிர்ப்புக்கள் வாக்குறுதிகள் கோரிக்கைகளுக்கு பின்னரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் கைச்சாத்திட்டுள்ள மத்திய அரசின் அடுத்த அதிரடியான அறிவிப்பாக  இது அமைந்துள்ளது.

இது குறித்து மக்களவையில் கருத்து தெரிவித்த பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் எழுத்துப்பூர்வ அறிக்கையில், ‘தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாகவோ அல்லது வேறு மாநிலத்திற்கு மாற்றுவதாகவோ எவ்வித திட்டமும் இல்லை. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கிடைக்காததால் திட்டத்தை செயற்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பொட்டிப்புரம் அருகிலுள்ள அம்பரப்பர் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கான பணிகள் கடந்த 2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1500 கோடி இந்திய ரூபா செலவில் செயற்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்தில் 1300 மீட்டர் ஆழத்தில் குகை அமைக்கப்பட்டு அதில் ஆய்வகங்கள் அமைத்து நியூட்ரினோ சோதனைகள் நடத்தப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மலைப்பகுதி, வன விலங்குகள் மற்றும் வனச்செழுமை மிகுந்த பகுதி என்பதால் குறித்த திட்டத்தை செயற்படுத்துவதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதற்கேற்ப குறித்த திட்டத்திற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி கடந்த 2015 ஆம் ஆண்டு தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு அனுமதி ரத்தும் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg