Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ்ப்பாணத்திற்கான நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடு அதிகரிப்பு – பதுளைக்கு குறைப்பு

In இலங்கை
Published: 07:09 GMT, Mar 30, 2017 |
0 Comments
1120
icon_com
This post was written by : Varshini

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக மாவட்ட ரீதியிலான ஆசன ஒதுக்கீடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில், யாழ்ப்பாணத்திற்கான ஆசன ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் இதுவரை ஆறு ஆசனங்களை கொண்டிருந்த யாழ். மாவட்டம் 7 ஆசனங்களை பெற்றுள்ளது.

எனினும் இதுவரை 9 ஆசனங்களை கொண்டிருந்த பதுளை மாவட்டத்தின் ஆசன எண்ணிக்கை 8ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களின் ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவு அட்டையின் அடிப்டையிலேயே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg