Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சூழ்நிலையை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை இந்திய அணியிடம் கற்றுக்கொண்டேன்: ஸ்மித்

In கிாிக்கட்
Updated: 08:24 GMT, Mar 30, 2017 | Published: 08:24 GMT, Mar 30, 2017 |
0 Comments
1592
This post was written by : Anojkiyan

வித்தியாசமான சூழ்நிலையில் எப்படி கையாள வேண்டும் என்பதை இந்திய அணியிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என அவுஸ்ரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

கடும் நெருக்கடிக்கும் எதிர்பார்ப்புக்கும் மத்தியில், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றிபெற்றது.

இந்த தொடரில் அவுஸ்ரேலிய அணி, தோல்வியை தழுவியிருந்தாலும் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. இந்நிலையில், இத்தொடரின் தோல்வியின் பின் அவுஸ்ரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில், “தொடருக்கு முன்பாக நாங்கள் 0-4 என்ற கணக்கில் தோற்போம் என்று நிறைய பேர் சொன்னார்கள். ஆனால் அதை மாற்றிக்காட்டியதுடன், ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் எங்களது வீரர்கள் பலமான சவால் கொடுத்து மல்லுகட்டி நின்றனர். அதை நினைத்து உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்.

தரம்சாலா டெஸ்டில் ஒரு கட்டத்தில் 1-130 ஓட்டங்கள் என்று வலுவான நிலையில் இருந்து, அதன் பிறகு 300 ஓட்டங்;களில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது ஏமாற்றம் அளிக்கிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி 400 முதல் 450 ஓட்டங்கள் வரை எடுத்திருந்தால் போட்டியின் போக்கு மாறியிருக்கும்.

இந்திய வீரர்கள் ஆக்ரோஷமான அணுகுமுறையை கடைபிடிக்கிறார்கள். தேவைப்படும் போது தடுப்பாட்டத்திலும் கவனம் செலுத்துகிறார்கள். வித்தியாசமான சூழ்நிலையில் எப்படி கையாள வேண்டும் என்பதை இந்திய அணியிடம் இருந்து கற்றுக்கொண்டேன்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg