Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெரீனாவில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது வழக்குத் தாக்கல்

In இந்தியா
Updated: 09:05 GMT, Mar 30, 2017 | Published: 09:03 GMT, Mar 30, 2017 |
0 Comments
1231
icon_com
This post was written by : Elakkiya
201703301124428754_bas-central-1._L_styvpf

விவசாயிகளுக்கு ஆதரவாக கடலில் இறங்கி போராட்டம் நடத்திய 29 பேர் மீதும் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல் மற்றும் பொலிஸ் உத்தரவை மீறி செயல்படுதல் உள்ளிட்ட இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும், வறட்சியால் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் இன்று 17 ஆவது நாளாகவும் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஆங்காங்கே எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் நேற்று (புதன்கிழமை) சென்னை மெரீனாவில் இளைஞர்கள் சிலர் ஒன்று கூடி கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். விவசாயிகளை பாதுகாப்போம், தண்ணீரை பாதுகாப்போம் என்று முழக்கமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மெரீனாவில் பரபரப்பான சூழல் நிலவிய நிலையில் 29 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg