Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா மீண்டும் இணைய உறுப்பு நாடுகள் இணங்க வேண்டும்

In
Published: 09:26 GMT, Mar 30, 2017 |
0 Comments
1152
icon_com
This post was written by : Risha

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு உத்தியோகபூர்வமாக விலகும் நடவடிக்கைகளை பிரித்தானியா ஆரம்பித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய 27 உறுப்பு நாடுகளின் ஒப்புதலின்றி பிரித்தானியா இந்நடவடிக்கையிலிருந்து பின்வாங்க முடியாது என ஐரோப்பிய நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.

லிஸ்பன் விதியின் 50ஆவது சரத்தை செயலாக்கும் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே-யின் நடவடிக்கையை திரும்பப் பெற முடியும். ஆனால், அதற்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அனைத்தும் இணங்க வேண்டும் என ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் அந்தோணியோ தஜானி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், பிரெக்சிற் மாத்திரமின்றி நாம் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்றோம். சட்டவிரோத குடியேற்றம், தீவிரவாதம் என்பவற்றால் மக்கள் தங்களது எதிர்காலம் குறித்து கவலை கொண்டுள்ளனர்.

நாம் ஒற்றுமையாக செயற்பட்டால் எந்தவொரு சவாலையும் இலகுவாக எதிர்கொள்ளலாம். அதன்படி உடன்பாடு எட்டப்பட்டாலும், எட்டப்படாவிடினும் பாதுகாப்பு அல்லது குறைந்தது புலனாய்வு விடயங்களில் பிரித்தானியாவுடனான ஒத்துழைப்பை தொடர வேண்டும் என்று குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg