Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வகுப்புத் தடையை நீக்குமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தனர் யாழ். பல்கலை மாணவர்கள்

In இலங்கை
Published: 08:18 GMT, Mar 30, 2017 |
0 Comments
1193
icon_com
This post was written by : Varshini

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாதவாறு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ள 13 கலைப்பீட மாணவர்களும் தம்மீதான தடை நீக்கப்பட வேண்டுமெனக் கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்துக்கு முன்பாகவுள்ள இராமநாதன் வீதியில் இன்று (வியாழக்கிழமை) காலை இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற யாழ். பல்கலைக்கான புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வில் குழப்பம் விளைவித்ததாக தெரிவித்தே இம் மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, கலைப்பீடமும் மூடப்பட்டிருந்தது.

கலைப்பீடத்தின் கல்விச் செயற்பாடுகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், மாணவர்கள் வகுப்புகளுக்குச் செல்லாமல் நேற்று பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தில் முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

எனினும், வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சாதகமான முடிவுகள் எதுவும் கிடைக்காத நிலையில் சம்பந்தப்பட்ட 13 மாணவர்களும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இம் மாணவர்களுக்கு ஆதரவாக கலைப்பீடத்தின் ஏனைய மாணவர்களும் அவ்விடத்தில் கூடியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg