Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மதுரங்குளியில் போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை தொடர்பிலான விழிப்புணர்வு

In இலங்கை
Published: 08:49 GMT, Mar 30, 2017 |
0 Comments
1100
icon_com
This post was written by : Anojkiyan
vaal

போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வொன்று நேற்று (புதன்கிழமை) மதுரங்குளி-விருதோடை சேனைக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றது.

மஸ்ஜீதுல் ஹூதா ஜூம்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்ற இந்நிகழ்வினை, பள்ளிவாசல் நிர்வாகம், கிராம அபிவிருத்திக்கான இளைஞர் அமைப்பு மற்றும் அக்கரைப்பற்று அபிவிருத்தி ஒன்றியம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வின் போது போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை தொடர்பிலான பல்வேறு விழிப்புணர்வு தொடர்பிலான சுலோகங்களை மாணவர்கள் ஏந்தி நின்றனர்.

இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சம்பிக்க சிறிவர்தன கலந்து கொண்டு பொது மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அத்துடன் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் பிரதம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அநுர குணவர்த்தன கலந்து கொண்டு போதைப் பொருள் பாவனை மற்றும் வீதி விபத்துக்கள் தொடர்பாகவும் அவர் அங்கு உரையாற்றினார்.

இந்நிகழ்வில் அதிபர்கள் கல்விமான்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

king

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg