Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொல்கத்தாவில் ஹோட்டலில் தீ விபத்து: இருவர் உயிரிழப்பு

In இந்தியா
Updated: 09:52 GMT, Mar 30, 2017 | Published: 09:48 GMT, Mar 30, 2017 |
0 Comments
1168
icon_com
This post was written by : Elakkiya
ukm

இந்தியாவின் கிழக்கு கொல்கத்தா நகரில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று (வியாழக்கிழமை) ஏற்பட்ட  தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானிய துணை உயர்ஸ்தானிகர் ஆணையகம் மற்றும் அமெரிக்க தூதரகம் ஆகியவற்றிற்கு முன்பாக அமைந்துள்ள ஹோ சி மின் சரனி ஹோட்டலில் இன்று அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹோட்டலின் சமயலறையில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாகவும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் காலை 6 மணியளவில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் மேற்படி வெடிப்பு சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg