Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் எதிரொலி: பிரித்தானியாவில் மேலெழுந்துள்ள விமர்சனங்கள்

In
Updated: 09:57 GMT, Mar 30, 2017 | Published: 09:56 GMT, Mar 30, 2017 |
0 Comments
1242
icon_com
This post was written by : Risha
brexitt

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான நடவடிக்கைகளை பிரதமர் தெரேசா மே ஆரம்பித்துள்ள நிலையில், அதன் எதிரொலியாக ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அந்தவகையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதன் மூலம் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வை எட்டலாம் என பிரித்தானிய சுதந்திர கட்சியின் துணை தலைவர் சூசன் இவான்ஸ் தெரிவித்தார்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவாக இந்த கட்சி நிறுவப்பட்டது. இந்நடவடிக்கையினால், இனி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மேலதிகமாக பிரித்தானியா பணம் செலுத்த வேண்டிய தேவை இருக்காது என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, பிரெக்சிற் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய இரு தரப்பிற்கும் நன்மை பயக்கும் என கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர் ஜூலியன் லெவிஸ் தெரிவித்தார்.

எனினும், பிரெக்சிற் குறித்த பேச்சுவார்த்தைகளை தீர்வின்றி தொடர்ந்து நேரத்தை வீணடிப்பதாகவும் இதனால் மக்கள் தங்களது எதிர்காலம் குறித்து கவலை கொண்டிருப்பதாகவும் மற்றுமொரு தரப்பில் கருத்து வெளியாகி வருகின்றன.

எல்லை தாண்டிய தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம் என மாநில பாதுகாப்பு பதில் செயலாளர் நியா கிறிஃபித் தெரிவித்தார். இது போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து பிரதமரிடம் கேள்விகளை தொடுத்து நிற்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg