Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கீத் நொயார் கடத்தலுடன் தொடர்புடைய ராணுவத்தினருக்கு பிணை

In இலங்கை
Updated: 10:17 GMT, Mar 30, 2017 | Published: 09:44 GMT, Mar 30, 2017 |
0 Comments
1105
icon_com
This post was written by : Vithushagan
408210440kieth-noyar-journalist

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சபை உறுப்பினர் உட்பட ஐந்து ராணுவ வீரர்களையும் தலா 10 லட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில்  விடுவிக்குமாறு கல்கிஸ்ஸ மேலதிக நீதவான் லோசனா அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த ஆறு பேரும் மற்றொரு வழக்கில் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதால் அவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் இன்று (வியாழக்கிழமை)  இடம்பெற இருந்த சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கான அடையாள அணிவகுப்பு பிற்போடப்பட்டுள்ளது.

கீத் நொயார் இன்றையதினம் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காததன் காரணமாவே அடையாள அணிவகுப்பு பிற்போடப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு மீண்டும் ஜூன் மாதம் 01 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg