Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்ஸிற்றினால் பிரித்தானியா அதிகாரத்தை இழந்துள்ளது: லோட் ஹெசல்ரைன்

In
Updated: 10:26 GMT, Mar 30, 2017 | Published: 10:26 GMT, Mar 30, 2017 |
0 Comments
1246
This post was written by : Risha

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்ததன் மூலம், பிரித்தானியா தனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிகாரத்தையும் செல்வாக்கையும் இழந்துள்ளது என பிரித்தானிய கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த முன்னாள் துணைப் பிரதமர் லோட் ஹெசல்ரைன்    தெரிவித்துள்ளார்.

ஆரம்பம் முதல், பிரெக்ஸிற்றிற்கு எதிரான நிலைப்பாட்டை தொடர்ந்து தக்கவைத்துள்ள முன்னாள் பிரதமர் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியா வலிமை ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் பிரிக்க முடியாத அளவிற்கு ஐரோப்பாவுடன் உள்பிணைக்கப்பட்டதாய் காணப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்துடன் எட்டப்படவுள்ள உடன்படிக்கையில் பிரித்தானியாவிற்கு சாதகமான தீர்மானங்கள் எதுவும் எட்டப்படமாட்டாது என்று ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்க வேண்டும் என பிரசாரம் செய்துவந்த டோரி பியர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg