Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசியல் தெரியாத குழந்தை என்று மதுசூதனன் கூறியிருப்பது அநாகரிகமானது: தீபா

In இந்தியா
Updated: 11:03 GMT, Mar 30, 2017 | Published: 11:02 GMT, Mar 30, 2017 |
0 Comments
1081
icon_com
This post was written by : Elakkiya
hyu

அரசியல் தெரியாத குழந்தை என்று மதுசூதனன் கூறியிருப்பது நாகரிகமற்ற பேச்சு என எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை சார்பில் போட்டியிடும் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான தேர்தல் பிரசாரங்கள் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை சார்பில் போட்டியிடும் தீபா செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது, ‘அ.தி.மு.க. யாருடைய கைகளில் சிக்கக் கூடாது என்று ஜெயலலிதா நினைத்தாரோ அவர்களே இன்று கட்சியை நடத்தி வருகின்றனர். சிலகாலம் சசிகலா குடும்பத்தினருடன் இருந்தவர்களும் தற்போது வாக்குக் சேகரிக்கின்றனர். ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளியில் கொண்டு வருவதாகவும் கூறுகின்றனர். அரசியல் தெரியாத குழந்தை என்று மதுசூதனன் என்னை கூறியிருப்பது அநாகரிகமானது.

நீங்கள் அவர்களை அடை யாளம் கண்டு ஆர்.கே.நகரில் என்னை வெற்றி பெற செய்ய வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் நீடிக்கும் மர்மங்களை நிச்சயமாக நான் வெளியில் கொண்டு வருவேன்’ என தீபா உறுதியளித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg