Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரியாவில் ராணுவ நடவடிக்கைகளை நிறைவுசெய்தது துருக்கி

In ஐரோப்பா
Updated: 10:53 GMT, Mar 30, 2017 | Published: 10:53 GMT, Mar 30, 2017 |
0 Comments
1074
icon_com
This post was written by : Risha
turkey

வடக்கு சிரியாவில் முன்னெடுத்துவந்த ராணுவ பிரசார நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளதாக துருக்கி பிரதமர் பினாலி யில்ரிம் தெரிவித்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்தை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எனினும், வடக்கு சிரியாவில் புதிய ராணுவ நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்தோ அல்லது சிரியாவிலுள்ள துருக்கி ராணுவ துருப்புக்களை நாட்டிற்கு மீள அழைப்பது தொடர்பிலோ பிரதமர் எந்தவொரு கருத்தையும் முன்வைக்கவில்லை.

தமது எல்லையிலிருந்து ஐ.எஸ். தீவிரவாதிகளை விரட்டியடிக்கும் வகையிலும், உள்ளூர் குர்திஷ் போராளிகளின் முன்னடைவை தடுக்கும் வகையிலும் துருக்கி ராணுவத்தினர் கடந்த ஓகஸ்ட் மாதம் தாக்குதலை தொடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg