Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மண்டைதீவு அல்லைப்பிட்டி இணைப்புவீதிக்கான பணிகள் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும்: டெனிஸ்வரன்

In இலங்கை
Published: 11:16 GMT, Mar 30, 2017 |
0 Comments
1105
icon_com
This post was written by : Anojkiyan
deni

மண்டைதீவு – அல்லைப்பிட்டி இணைப்புவீதிக்கான ஆரம்ப பணிகள் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என்றும், அத்தோடு அல்லைப்பிட்டி அல்லது மண்டைதீவில் உள்ள ஒரு பாடசாலையை கல்வி அமைச்சருடன் தொடர்புகொண்டு உயர்தரம் வரை தரமுயர்த்த சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் எனவும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின்கீழ் கடந்த 06 மாதங்களாக நடாத்தப்பட்ட மகளிருக்கான தையல் கலை பயிற்சியை நிறைவுசெய்த பெண்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த ஆண்டு மண்டைதீவு விஜயத்தின்போது அவர்களது வீதிக்கான கோரிக்கை என்னிடத்தில் வைக்கப்பட்டது அதுமட்டுமல்லாது போக்குவரத்து தொடர்பாகவும் அங்கு ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டது அச்சந்தர்ப்பத்தில் அங்கு பங்குத்தந்தை மற்றும் எனது கிராம மக்களுக்கு நான் அவற்றை செய்துதருவேன் என்று வாக்குறுதிவழங்கியிருந்தேன் அதேபோல அவற்றை நிறைவேற்றியுள்ளேன்.

கிராமத்தில் ஏதேனும் நிலையான வருமானம் பெறக்கூடிய ஓர் சுயதொழில் முயற்சிக்கான திட்ட முன்வரைபினை எனக்கு சமர்ப்பியுங்கள். எதிர்வரும் ஆண்டு அல்லைப்பிட்டி கிராமத்திற்கு 03 மில்லியன் நிதியை ஒதுக்கித்தருகிறேன்.

அல்லைப்பிட்டி தேவாலயத்திற்கும், சாட்டி தேவாலயத்திற்கும் அதேவேளை இங்கு இந்து ஆலயம் இருக்குமாயின் அதனையும் எனக்கு தெரியப்படுத்துங்கள் மூன்று ஆலயங்களுக்கும் தலா ஒரு இலட்சம் வழங்க நான் தயாராகவுள்ளேன். காரணம் மதங்களுக்கிடையில் ஒற்றுமை பெருகவேண்டும் என்ற ஓர் எண்ணத்துடன் தான்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg