Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

20 வருடங்களுக்குப் பிறகு முன்னணி நடிகருடன் இணையும் பிரகாஷ்ராஜ்

In சினிமா
Published: 11:06 GMT, Mar 30, 2017 |
0 Comments
1126
icon_com
This post was written by : Vithushagan
201703300838103891_Iruvar-Team-Reunite-again_SECVPF

இருவர் படத்தில் இணைந்து நடித்த மோகன்லால், பிரகாஷ்ராஜ் 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து மலையாள படம் ஒன்றில் நடிக்க உள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

மணிரத்னம் இயக்கத்தில் 20 வருடங்களுக்கு முன்னர் வெளியான படம் ’இருவர்’ மோகன்லால், பிரகாஷ் ராஜ், நாசர், ஐஸ்வர்யா  ராய், தபு, கௌதமி உள்ளிட்ட பலரும் நடித்து அரசியல் பின்னணியில் உருவாகிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை  பெற்றது.

இந்நிலையில். மோகன்லால்-பிரகாஷ்ராஜ் இணைந்து மலையாளத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.  ’ஒடியன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீகுமார் இயக்குகிறார். இப்படத்தில் மோகன்லாலுக்கு வில்லனாக பிரகாஷ் ராஜ்  நடிக்க உள்ளார்.

மஞ்சு வாரியர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள இப்படத்திற்கு, எம்.ஜெயச்சந்திரன் இசையமைக்க உள்ளார். வருகிற  2018ஆம் ஆண்டில் இப்படம் திரைக்குவர உள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg