Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அபராதம் செலுத்த தயாரில்லை: டேவிட் டேவிஸ்

In
Updated: 11:11 GMT, Mar 30, 2017 | Published: 11:10 GMT, Mar 30, 2017 |
0 Comments
1387
icon_com
This post was written by : Risha
david davis

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு பிரித்தானியா எவ்வித அபராதத் தொகையையும் செலுத்தாது எனவும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பாரிய தொகையை செலுத்தும் காலம் முடிவுக்கு வரப்போகிறது என்றும் பிரெக்சிற்-இற்கு ஆதரவான பிரசார குழுவின் மாநிலச் செயலாளர் டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதத்தில் பிரதமர் தெரேசா மே கைச்சாத்திட்டுள்ள நிலையில், அது தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், சட்டங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான வாக்கெடுப்பில் வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் தருணம் ஏற்பட்டுள்ளது.

எமது சர்வதேச கடப்பாடுகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் எமது உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் நாம் கோரியிருந்தோம். அதன்படி இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சட்ட ரீதியில் உரிய நடவடிக்கை எடுப்போம். ஆனால், எவ்வித அபராதத் தொகையையும் செலுத்த நாம் தயாராக இல்லை என்றும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg