Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தயாராகும் மாணவர் அமைப்பு

In இந்தியா
Updated: 11:43 GMT, Mar 30, 2017 | Published: 11:42 GMT, Mar 30, 2017 |
0 Comments
1188
This post was written by : Elakkiya

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல்லில் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என மாணவர் இந்தியா அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

குறித்த போராட்டத்திற்கு மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு எதிர்ப்பை வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் மக்கள் இன்று 22 ஆவது நாடாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும் போராட்டங்கள் நடைபெறுகின்றது.

இந்நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி வரும் ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல்லில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என மாணவர் இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது. திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg