Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இறுதி யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட இந்திய விமானத்திற்கு ஓய்வு: உண்மையை கூறினார் இந்திய தளபதி

In இலங்கை
Published: 12:34 GMT, Mar 30, 2017 |
0 Comments
2291
icon_com
This post was written by : Vithushagan

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது இலங்கை படையினருக்கு, இந்திய கடற்படையினரின் ஒத்துழைப்பு வழங்கப்பட்டதை இந்திய கடற்படை தளபதி மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய கடற்படையினரால் கடந்த 29 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வந்த ரீ.யூ. 142எம் ரக ரோந்து விமானத்தை சேவையில் இருந்து விலக்கும் நிகழ்வு இன்று(வியாழக்கிழமை) தமிழகத்தில் அரங்கோணத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய கடற்படையின் பிரதம அதிகாரி சுனில் லாண்பா இதனை தெரிவித்துள்ளார்.

அதாவது சேவையில் இருந்து நீக்கப்படுகின்ற குறித்த ரோந்து விமானம், விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை படையினருக்கும் இடையிலான இறுதி யுத்த காலத்தில் இலங்கை வான்பரப்பில் உலவியதாகவும் அதேபோன்று இந்திய அமைதிப் படை காலத்திலும் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தத்தில் இலங்கை இராணுவம் புலிகளை வெற்றி கொள்வதற்கு இந்திய நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்துழைப்பை வழங்கியதாக தமிழ் தரப்புக்களினால் முன்வைக்கப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய கடற்படை தளபதியின் கருத்து அமைந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg