Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் விரைவில்

In இலங்கை
Published: 16:04 GMT, Mar 30, 2017 |
0 Comments
1157
icon_com
This post was written by : Vithushagan
o-BALLOT-BOX-facebook

மாகாண சபைகள் சட்டத்தின் கீழ் இவ்வருடம் வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடாத்தப்படவுள்ளதாக தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளுராட்சி சபைத் தேர்தலையும் இவ்வருடத்தில் நடாத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

70 வீதம் தொகுதி வாரியிலும், 30 வீதம் விகிதாசார அடிப்படையிலும் இந்த தேர்தல் நடாத்தப்படவுள்ளது.  இருப்பினும் இந்த நடவடிக்கைகளில் சிக்கல் உள்ளது. இதில் 25 வீதம் பெண்களின் பங்களிப்பு இருக்க வேண்டும்.

இந்த அனைத்தையும் கருத்தில் கொண்டு இவ்வருடத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடாத்தப்படவுள்ளது. ஜனாதிபதியின் முழுமையான எதிர்பார்ப்பு இவ்வருடத்தில் தேர்தலை நடாத்துவதாகும் எனவும் முதலமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg