Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Updated: 16:05 GMT, Mar 30, 2017 | Published: 16:05 GMT, Mar 30, 2017 |
0 Comments
1123
This post was written by : Sivaguru Siva

பிரித்தானியாவின் லூட்டன் பகுதியிலிருந்து அயர்லாந்து தலைநகர் டப்ளினுக்கு பறந்து கொண்டிருந்தபோது நேற்று மாலை காணாமல்போன தனியார் உலங்குவானூர்தி வீழந்து நொருங்கியுள்ளது.

அதில் பயணித்த ஐவரும் பலியானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேல்ஸ் பிராந்தியத்தின் மலைப்பகுதி ஒன்றில் வீழ்ந்து நொருங்கிய இந்த உலங்குவானூர்தியின் சிதைவுகளுக்கு இடையே மேற்படி 5 உடலங்களும் இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உலங்கு வானூர்தி விபத்து தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கபட்டுள்ளன.

_94825518_gettyimages-114461680-1

மலேசியாவில் வைத்து கொடிய விசமூட்டலுக்கு உள்ளாக்கபட்டு கொல்லப்பட்ட வடகொரிய அரசதலைவரி;ன் உறவினர் கிம் ஜொங் நாமின் உடலை வட கொரியாவிடம் கையளிக்க மலேசிய தலைமையமைச்சர் உடன்பட்டுள்ளார்.

கடந்தமாதம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து கிம் ஜொங் நாம் படுகொலைசெய்யப்பட்ட பின்னர் வடகொரியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் ராஜதந்திர முறுகல்கள் எழுந்திருந்தன

வடகொரிய அரசாங்கமெ இந்தப் படுகொலைக்குப் பின்னால் இருப்பதாக மலேசிய அரசாங்கம் குற்றஞ் சாட்டிவரும் போதிலும் இதனை வடகொரியா மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது

FRANCOIS_2565225k

பிரித்தானிய அரசாங்கம் பிரெக்ஸிற் தொடர்பான தெளிவான விதிகளை வெளியிடும்வரை அதனுடன் முறையான பேச்சுக்களுக்கு சாத்தியமில்லையென பிரெஞ்சு அரசதலைவர் பிரான்சுவா ஹொலாந் அறிவித்துள்ளார்.

ஜரோப்பிய ஒன்றியத்துக்கு செலுத்தவேண்டிய கட்டணங்கள் மற்றும் பிரித்தானியாவில் வாழும் ஜரோப்பிய ஒன்றிய குடிமக்களின் உரிமைகள் தொடர்பாக பிரித்தானிய தலைமையச்சர்.   திரேசா மே முதலில் வெளிப்படுத்த வேண்டுமெனவும் பிரான்சுவா ஹொலந் குறிப்பிட்டுள்ளார்

_95311863_trumphealth

அமெரிக்க அரசதலைவர் டொனால்ட் ரம்ப் விதித்த பயணத்தடைக்கு எதிராக பிறப்பிக்கபட்ட தடைஉத்தரவை ஹவாய் மாநிலத்தின் சமஸ்டி நீதிபதி, காலவரையின்றி நீடித்துள்ளதால் டொனால்ட் ரம்பின் நிர்வாக செயலாணைக்குரிய சவால்கள் தொடர்கின்றன.

டொனால்ட் ரம்பின் புதிய பயணத்தடை உத்தரவினால் 6 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டது

ஆயினும் அந்த புதிய பயணத்தடைக்கு எதிராகவும் வழக்குபோடப்பட்ட நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வரை, டொனால்ட் ரம்பின உத்தரவை நடைமுறைப்படுத்த முடியாதென்பதும் குறிப்பிடத்தக்கது

FADFA784-D2FB-4165-AC17-63B442089C3D_cx0_cy9_cw0_w1023_r1_s

பாகிஸ்தானின் முதல் நோபல் விருதாளரான விஞ்ஞானி ஆப்தஸ் சலாமின் உறவினரும் பிரபல சட்டவாளருமான மாலிக்சலீம் லத்தீப் லாகூரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்

பிரபலவழக்கறிஞரான இவர் தனது புதல்வனுடன் நீதிமன்றத்திற்குச்சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இவர்கள் இருவர் மீதும் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

மாலிக் சலீம் லத்தீப் பாகிஸ்தானின் சிறுபான்மை அகமதியா பிரிவைச் சேர்ந்தவரென்பது குறி;ப்பிடத்தக்கது

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg