Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெரும்பான்மையினத்தவாின் அத்துமீறல்களை தடுக்க தமிழ் தலைமைகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

In இலங்கை
Updated: 05:06 GMT, Mar 31, 2017 | Published: 03:44 GMT, Mar 31, 2017 |
0 Comments
1271
icon_com
This post was written by : Risha

முல்லைத்தீவின் எல்லை கிராமங்களில் அதிகரித்துவரும் பெரும்பான்மை இன மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த தமிழ் தலைமைகள் உரிய தரப்பிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வடமாகாண சபையின் 85ஆவது அமர்வின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அதன்படி இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், வடமாகாண சபை முதலமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உடனடியாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவின் எல்லை கிராமங்களில் அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் பிரேரணை முன்வைத்தார்.

இப்பிரச்சினையை தீர்க்க தமிழ் தலைமைகள் உரிய அரச தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அமைய இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg