Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பட்டதாரிகள் வீதியில் நிற்பதை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது

In இலங்கை
Updated: 04:32 GMT, Mar 31, 2017 | Published: 04:32 GMT, Mar 31, 2017 |
0 Comments
1653
icon_com
This post was written by : Risha
bati

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பட்டப்படிப்பை பூர்த்திசெய்த மாணவர்கள் வீதியில் நிற்பதை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது எனவும் அனைவருக்கும் நியமனங்களை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவினர் உறுதியளித்துள்ளனர்.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளை, நாடாளுமன்ற தெரிவுக்குழுவினர் நேற்று (வியாழக்கிழமை) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதன்போதே இவ்வாறு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பட்டதாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்ட குறித்த குழுவினர், வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கம் நியமனங்களை வழங்கும் எனத் தெரிவித்ததுடன், இரண்டு மாத கால அவகாசமும் கோரியுள்ளனர்.

மேலும், கடந்த ஆட்சியாளர்களின் செயற்பாடுகளினாலேயே பட்டதாரிகள் வீதியிலிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் நியமனங்களை கோரி வேலையற்ற பட்டதாரிகள் கடந்த 38 தினங்களாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg