Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன்: சிந்து-சாய்னா நேருக்கு நேர் மோதல்

In விளையாட்டு
Updated: 05:08 GMT, Mar 31, 2017 | Published: 05:08 GMT, Mar 31, 2017 |
0 Comments
1374
This post was written by : Anojkiyan

இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடரின், காலிறுதி போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனைகளான பி.வி சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் இன்று (வெள்ளிக்கிழமை) பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை) நடந்த காலிறுதிக்கு முன்னைய போட்டியில், சாய்னா நேவால் தாய்லாந்தின் போர்ன்பவீ சோசுவோங்கை எதிர் கொண்டார். இதில் சாய்னா 21-14, 21-12 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

அதேபோல், பிவி சிந்து ஜப்பானின் சாயினா கவகமி உடன் மோதினார். இதில் பி.வி சிந்து 21-16, 23-21 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

இதனையடுத்து, சாய்னா நேவால் மற்றும் பி.வி சிந்து இருவரும் காலிறுதி போட்டியில் நேரடியாக மோதவுள்ளனர். சிந்துவும், சாய்னாவும் இதுவரை சர்வதேச போட்டிகளில் ஒரே ஒரு முறை தான் நேரடியாக மோதி உள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg