Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி கைது

In
Published: 05:06 GMT, Mar 31, 2017 |
0 Comments
1177
icon_com
This post was written by : Elakkiya

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் ஜியுன் ஹை ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் கைது செய்யப்பட்டுள்ள பார்க் ஜியுன் ஹை சியொல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

தென் கொரியாவின் ஜனாதிபதியாக பார்க் ஜியுன் ஹை பதவிவகித்த காலத்தில் அரசின்மீது பாரிய ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. ஜனாதிபதியின் நெருங்கிய தோழி சோய் சூன் சில் அரச விடயங்களில் தலையீடு செய்வதாகவும் அரசின் முக்கிய இரகசிய கோப்புக்களை ஆய்வு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன் ஜனாதிபதி பார்க் ஜியுன் ஹையுடனான தனது நெருக்கத்தை பயன்படுத்தி பல நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகளை பெற்று ஆதாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மேற்படி குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கடந்த மாதம் சோய் சூன் சில் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து தென் கொரிய ஜனாதிபதி பார்க் ஜியுன் ஹை பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் வலுப்பெற்றதுடன் சியொலில் ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

இவ்வாறு தென் கொரியாவில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமற்ற தன்மையை சமாளிக்கும் வகையில் பார்க் ஜியுன் ஹைக்கு எதிராக நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணை தாக்கல் செய்யப்பட்டு அரசியல் சாசன நீதிமன்றில் ஊடாக இம்மாதம் 10 ஆம் திகதி பார்க் ஜியுன் ஹை பதவி நீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg