Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் பேச்சுவார்த்தை வழிகாட்டுதல் வரைபினை வெளியிடுகிறார் டொனால்ட் டஸ்க்

In
Updated: 05:32 GMT, Mar 31, 2017 | Published: 05:31 GMT, Mar 31, 2017 |
0 Comments
1211
icon_com
This post was written by : Elakkiya
_95401045_c9810338-e3ac-48fa-9c38-2287b55b0560

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது குறித்து எத்தகைய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகின்றது என்பது தொடர்பிலான வழிகாட்டுதல் வரைபினை ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க் வெளியிடவுள்ளார்.

மேற்படி வழிகாட்டுதல் முன்மொழிவுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. மேலும், டொனால்ட் டஸ்கின் இந்த முன்மொழிவுகள் இரண்டுவருட பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கு பயன்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்க எதிர்கால நல்லுறவுகள் குறித்து கவனம் செலுத்துவதற்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது குறித்த விதிமுறைகளை பிரித்தானியா முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg