Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை- இந்திய மீனவப் பிரச்சினை குறித்து இருதரப்பு பேச்சு: நிரந்தர தீர்வு எட்டப்படுமா?

In இலங்கை
Updated: 05:41 GMT, Mar 31, 2017 | Published: 05:41 GMT, Mar 31, 2017 |
0 Comments
1219
icon_com
This post was written by : Risha

பல காலமாக நீடித்துவரும் இலங்கை- இந்திய மீனவப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் இருநாட்டு அரசாங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் ஏப்ரல் மாத ஆரம்பத்தில் இடம்பெறவுள்ளது.

அதன்படி ஏப்ரல் மாத முதல் வாரத்தில், இலங்கை அரசாங்கம் சார்பில் கடற்தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு புது டெல்லிக்கு பயணமாகவுள்ளது.

இதன்போது, குறிப்பாக எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அதனை எவ்வாறு கையாள்வது என்ற விடயம் தொடர்பிலும், மீனவர்களை பாதுகாக்கும் வகையிலான நகர்வுகளை கையாள்வது தொடர்பிலும் முக்கிய கவனம் செலுத்தப்படும் என இந்திய கடற்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருதல், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை தடுக்க வேண்டும் எனவும் இலங்கை மீனவர்கள் தொடர்ச்சியாக அரசாங்கத்தை வலியுறுத்திவந்த நிலையில், இது தொடர்பில் கடந்த ஆண்டு இறுதியிலும் இவ்வாண்டு பெப்ரவரி மாதமும் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கத்தின் தலைமையில் உயர்மட்டகுழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg