Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டோனியுடனான நட்பில் அணித்தலைவர் பதவி எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது: ஸ்மித்

In கிாிக்கட்
Published: 06:12 GMT, Mar 31, 2017 |
0 Comments
1858
icon_com
This post was written by : Anojkiyan
smith

ஐ.பி.எல். ரி-ருவென்ரி தொடரில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்டீவ் ஸ்மித், முன்னாள் தலைவரான டோனியுடன் தொழில்முறையான நட்பில் அணித்தலைவர் பதவி எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு தோற்றம் பெற்ற புதிய அணியான ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்கு தலைவராக டோனி செயற்பட்ட நிலையில், இம்முறை அவரது பதவி பறிக்கப்பட்டு அவுஸ்ரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த பின்னணியில் ஸ்மித், குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ஸ்மித் மேலும் கூறுகையில், ”எனக்கும் டோனிக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் சில தகவல்களை பரிமாற்றிக் கொண்டோம். டோனி மிகவும் ஆதரவாக இருக்கிறார். அவருடனான தொழில்முறையான நட்பில் அணித்தலைவர் பதவி எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg