Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒட்டுமொத்த அவுஸ்ரேலிய அணியையும் குறை கூறவில்லை: கோஹ்லி விளக்கம்

In கிாிக்கட்
Published: 07:02 GMT, Mar 31, 2017 |
0 Comments
1203
icon_com
This post was written by : Anojkiyan
stevefb-story_647_033017011619

கடும் சர்ச்சைகளுடன் நிறைவுக்கு வந்த இந்திய மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் போது அதிக மனக்கசப்பிற்குள்ளான இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, அவுஸ்ரேலிய அணியினர் இனி நண்பர்கள் இல்லை என கூறியிருந்த நிலையில், தற்போது ஒட்டுமொத்த அவுஸ்ரேலிய அணியையும் குறை கூறவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த தொடரில், இந்திய மற்றும் அவுஸ்ரேலிய அணி வீரர்களுக்கு இடையில் வாக்குவாதம் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், இத்தொடரின் நிறைவின் பின் அவுஸ்ரேலிய வீரர்கள் இனி களத்திற்கு வெளியேயும் நண்பர்கள் கிடையாது என இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி திட்டவட்டமாக கூறினார்.

இதனால், குறித்த கருத்திற்கு பல இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள் தங்களது அதிருப்தியை வெளியிட்டனர். இந்நிலையில் தனது கருத்து குறித்து விராட் கோஹ்லி விளக்கமளிக்கையில்,

“ஒட்டுமொத்த அவுஸ்ரேலிய அணியையும் இனி நண்பர்கள் இல்லை என்று சொன்னதாக அர்த்தம் இல்லை. ஒரு சில தனி நபர்களை மட்டுமே தெரிவித்தேன். சில அவுஸ்ரேலிய வீரர்களுடன் நான் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். ஐ.பி.எல் போட்டியில் பெங்களூர் அணியில் விளையாடும் அவுஸ்ரேலிய வீரர்களுடனான நட்பில் எந்த மாற்றமும் இல்லை” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg