Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென் ஆபிரிக்காவின் நிதி அமைச்சர் பதவிநீக்கம்

In
Updated: 07:22 GMT, Mar 31, 2017 | Published: 07:20 GMT, Mar 31, 2017 |
0 Comments
1239
icon_com
This post was written by : Elakkiya
pravin-gordhan

தென் ஆபிரிக்காவின் நிதி அமைச்சர் பிரவீன் கோர்தான் (Pravin Gordhan) ஜனாதிபதி ஜேக்கப் ஸூமாவினால் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நாட்டின் வர்த்தக சந்தை மற்றும் நாணய அமைப்பில் சரிவு ஏற்படும் என்ற ஊகத்தின் அடிப்படையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பதவி நீக்கப்பட்டுள்ள பிரவீன் கோர்தானுக்கு பதிலான மலூசி ஹிகபா (Malusi Gigaba) நிதி அமைச்சராகவும் துணை நிதி அமைச்சர் மக்கபிசி ஜோனஸிற்கு (Mcebisi Jonas)  பதிலாக ஃபிசோ போதலெசியும் Sfiso Buthelezi) நியமிக்கப்படவுள்ளதாக நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி மாளிகையால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஜனாதிபதி ஜேக்கப் ஸூமாவினால் அமைச்சரவையில் மேலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து ஜனாதிபதி அறிக்கையில், ‘தீவிரமான சமூக பொருளாதார மாற்றத்தை கொண்டு அவர்களுடைய சகாக்களுடன் அயராது பணிபுரிவதற்காகவும் ஏழைகளுக்கான சிறந்த வாழ்க்கையை உறுதி செய்வதற்காகவும், தொழிலாளர் வர்க்கத்தினை நிதர்சனமாவதற்காகவும் நான் புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களை கொண்டுவந்துள்ளேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg