Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஷவாயு கசிந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்

In இந்தியா
Published: 07:32 GMT, Mar 31, 2017 |
0 Comments
1103
icon_com
This post was written by : Surenth
Water

ஆந்திர மாநிலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் விஷவாயு கசிந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்கு கோதாவரி மாவட்டம், மொகலத்தூர் மண்டலம், நல்லவாரி செருவு பகுதியில் ஆனந்த் அக்வா தண்ணீர் சுத்திகரிப்பு தொழிற்சாலையிலேயே குறித்த அனர்த்தம் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

30இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குறித்த தண்ணீர் சுத்திகரிப்பு தொழிற்சாலை பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள நீர்தேக்க தொட்டியை 5 தொழிலாளர்கள் சுத்தம் செய்துள்ளனர்.

இதன்போது, திடீரென அதிலிருந்து விஷவாயு தாக்கியதில் 5 பேரும் மயங்கி விழுந்துள்ளனர். இவர்களை அங்கிருந்து மீட்டு, நரசாபுரம் அரசு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து, சிகிச்சை பலனின்றி 5 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து நரசாபுரம் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg