Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொதுமக்களின் நலனை கருத்திற்கொள்ளாதவர்கள் தண்டிக்கப்படுவர்: சத்தியலிங்கம்

In இலங்கை
Published: 07:33 GMT, Mar 31, 2017 |
0 Comments
1184
icon_com
This post was written by : Risha

பொதுமக்களின் நன்மைகளை கருத்திற் கொள்ளாது செயற்படும் அனைவரும் தண்டிக்கப்படுவர் என வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்கள் முன்னெடுத்துவரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இன்றைய (வெள்ளிக்கிழமை) போராட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சர் உட்பட்ட வவுனியா தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களும் இன்றைய போராட்டத்தில் கலந்துக் கொண்டிருந்தனர். இதன்போது, தமது பிள்ளைகளை தொலைத்த தாய்மார் கண்ணீர் மல்க தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதுடன், தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு மன்றாடினர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த உறவுகளுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாகாண சுகாதார அமைச்சர், தங்களது பிள்ளைகள் உயிருடன் இருக்கின்றனர் என பெற்றோர் திடமாக நம்புகின்றனர். அவர்கள், இன, மத, மொழி பாகுபாடின்றி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

எமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காகவே நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. அந்தவகையில் எமது எதிர்பார்ப்புகள் இந்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையேல் முன்னைய அரசாங்கத்தை போல இந்த அரசாங்கமும் வீட்டுக்கு செல்ல வேண்டி ஏற்படும் என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg