Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக மீனவர்கள் மீது தாக்குதல்: 6பேர் வைத்தியசாலையில்

In இந்தியா
Updated: 09:27 GMT, Mar 31, 2017 | Published: 09:10 GMT, Mar 31, 2017 |
0 Comments
1121
icon_com
This post was written by : Surenth

இந்திய எல்லையை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் இந்திய கடலோர காவல்படையினரால் தாக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியை சேர்ந்த 17 மீனவர்கள் நேற்று (வியாழக்கிழமை) கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.

இந்த தாக்குதல் சம்பவத்தின் போது, சந்திரநாத், ஞானசேகரன், சரத்குமார், சத்தியநாதன், வேல்முருகன், மணிவண்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் காரைக்கால் அரசு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோடியக்கரை அருகே கடற்பகுதியில் சர்வதேச எல்லைக்கு 2 நாட்டிக்கல் மைல் தூரத்துக்கு முன்னால் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg