Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

In டெனிஸ்
Published: 07:56 GMT, Mar 31, 2017 |
0 Comments
1192
icon_com
This post was written by : Anojkiyan
vi

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ், அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், தரவரிசையில் 12ஆம் இடத்தில் உள்ள அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், 11ஆம் நிலை வீராங்கனையான இங்கிலாந்தின் ஜோஹன்னா கொன்டாவை எதிர்கொண்டார்.

இதில் வீனஸ் வில்லியம்ஸ் எளிதில் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அவர் 4-6, 5-7 என்ற நேர்செட் கணக்கில் கொன்டாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

இந்த வெற்றியின் மூலம் கொன்டா, மியாமி இறுதிப் போட்டியில் நுழைந்த முதல் இங்கிலாந்து வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg