Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.பி.எல்.: பெங்களூர் அணியின் தலைவராகிறார் டிவில்லியர்ஸ்

In கிாிக்கட்
Published: 08:12 GMT, Mar 31, 2017 |
0 Comments
1843
icon_com
This post was written by : Anojkiyan
viratkohli-abd-ipl9-600-28-1464419229

தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டுவரும் விராட் கோஹ்லி, அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக உடல்தகுதி பெறாவிட்டால், பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு அணித்தலைவராக ஏ.பி டிவில்லியர்ஸ் செயல்படுவார் என அணியின் தலைமை பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக கோஹ்லி இறுதி டெஸ்ட் போட்டியில் களம் காணவில்லை. இதனால் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் களமிறங்குவாரா என்ற கேள்வி அனைவரினதும் மத்தியில் எழுந்துள்ளது.

ஆனால் இதுவரை அவரது காயம் குறித்த உறுதியான தகவல்கள் இல்லாத நிலையில், பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணியை கோஹ்லி வழிநடத்துவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி கூறுகையில்,

“பெங்களூர் அணியின் தலைவரட விராட் கோஹ்லி, சமீபத்தில் தோள்பட்டையில் காயம் அடைந்தார். அவரது காயத்தன்மை எந்த அளவிற்கு இருக்கிறது என்பது எங்களுக்கு தெளிவாக தெரியவில்லை. அவரது உடல்தகுதி குறித்து ஓரிரு நாட்களில் தெரிய வரும். எதிர்வரும் 2ஆம் திகதி அவர் அணியுடன் இணைகிறார்.

கோஹ்லி விளையாட முடியாமல் போனால் அவருக்கு பதிலாக டிவில்லியர்ஸ் அணியின் தலைவர் பொறுப்பை கவனிக்கக்கூடும். ஆனால் கோஹ்லியின் நிலைமை குறித்து உறுதியாக தெரிந்த பிறகே அது பற்றி கூற முடியும். டிவில்லியர்ஸ் 2ஆம் திகதி பெங்களூர் வந்தடைகிறார். கோஹ்லி விளையாட முடியாத பட்சத்தில் சர்ப்ராஸ்கான், மன்தீப்சிங் போன்ற இளம் வீரர்களுக்கு களம் இறங்க வாய்ப்பு கிடைக்கும்” என கூறினார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில், 5ஆம் திகதி நடக்கும் முதல் போட்டியில், பெங்களூர் அணி நடப்பு சம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg