Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனேடிய-அமெரிக்க கடற்படையினரால் 14,000 கிலோகிராம் கொக்கெய்ன் பறிமுதல்

In கனடா
Updated: 09:38 GMT, Mar 31, 2017 | Published: 09:37 GMT, Mar 31, 2017 |
0 Comments
1104
icon_com
This post was written by : Anojkiyan
ton

சர்வதேச கடற்பரப்பில், எச்.எம்.சி.எஸ் சாஸ்காட்டூன் எனப்படும் கனேடிய கடற்படை கப்பல், அமெரிக்க கப்பலுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல்களை முறியடிக்கும் வகையிலான தேடுதல் நடவடிக்கையில் 14,000 கிலோகிராமுக்கும் அதிகமான கொக்கெய்ன் வகை போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தேடுதல் நடவடிக்கை குறித்து அமெரிக்க கடலோர காவற்படை அதிகாரியான கேப்டன் மார்க் ஃபேடர் கூறுகையில்,

சர்வதேச கடற்பரப்பில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனேடிய கடற்படைக் கப்பலான எச்.எம்.சி.எஸ் சாஸ்காட்டூன், பசுபிக் சமுத்திரத்தின் தென் பிராந்தியங்களில், குறிப்பாக மத்திய மற்றும் தென் அமெரிக்க கடற்பரப்புகளில் இந்த போதைப் பொருள் முறியடிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், இவ்வாறு கரிபீயன் கடற்பகுதிகளில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோர், வெறும் போதைப் பொருட்களை மாத்திரம் கடத்துபவர்களாக இல்லை எனவும், அவர்கள் உலகின் ஏனைய பகுதிகளுக்கு வன்முறைகளையும், ஊழல்களையும், குழப்பங்களைளும், நிலையற்ற தன்மையையும் கூடவே எடுத்துச் செல்கின்றனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் மேற்கெர்ணட வெற்றிகரமான போதைப் பொருள் கடத்தல் முறியடிப்பில், பல்லாயிரக்கணக்கான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், இந்த நடவடிக்கைகளின் போது சுமார் 30 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீதான விசாரணைகள் அமெரிக்காவில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தின் தென்கிழக்கு கரைப் பிராந்திய துறைமுகம் ஒன்றில் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான பொருட்களும் அச்சுறுத்தல்களும் எமது பகுதிக்குள் நுளைவதைத் தடுக்கும் வகையில், அண்டை நாடுகளுடனும், நட்பு நாடுகளுடனும் இணைந்து பணியாற்ற வேண்டியதனை அவசியத்தினை இது வலியுறுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg