Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டத்தில் கனிமொழியும் இணைந்து கொண்டார்

In இந்தியா
Published: 09:43 GMT, Mar 31, 2017 |
0 Comments
1099
icon_com
This post was written by : Surenth
Tamil Nadu Farmers Protest At Kanimozhi

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாட்டு விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்தரில் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 18ஆவது நாளாகவும் தொடர்கிறது.

இந்த போராட்டத்தில் தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஜந்தர்மந்தர் தனது ஆதரவை தெரிவித்து இணைந்து கொண்டுள்ளார்.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிகள் இணைப்பை உறுதிபடுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே விவசாயிகள் குறித்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் நேரில் சென்று தமது ஆதரவை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg