Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லொறி உரிமையாளர்களின் போராட்டம் 2ஆவது நாளாக இன்றும் நீடிக்கிறது

In இந்தியா
Updated: 11:48 GMT, Mar 31, 2017 | Published: 10:25 GMT, Mar 31, 2017 |
0 Comments
1089
icon_com
This post was written by : Surenth
Lorry Owners Protest

தமிழக லொறி உரிமையாளர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்த போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

வாகன காப்பீட்டிற்கான பிரீமியம் தொகை உயர்வு, RTO கட்டண உயர்வு, பெற்றோல் மற்றும் டீசல் மீதான வற் வரி உயர்வு உள்ளிட்டவற்றை இரத்து செய்ய வேண்டும் என கோரி நேற்று (வியாழக்கிழமை) குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று தமிழக அரசு உடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, இந்த வேலைநிறுத்த போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் நீடிப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய தென்மாநில லொறி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதன்காரணமாக பல கோடி ரூபா நஸ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg