Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பன்னாட்டுத் திறனாளர்களை கனடாவுக்குள் உள்வாங்கும் நடவடிக்கையில் அரசு தீவிரம்

In கனடா
Published: 10:59 GMT, Mar 31, 2017 |
0 Comments
1118
icon_com
This post was written by : Anojkiyan
pun

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகல், புதிய அமெரிக்க ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்புகள் ஆகியன பன்னாட்டுத் திறனாளர்களை வெகுவாக பாதித்துள்ள நிலையில், வெளிநாட்டு திறனாளர்களையும், நிபுணர்களையும் கனடாவுக்குள் உள்வாங்கும் நடவடிக்கையில் கனேடிய அரசு ஆர்வம்காட்டி வருகின்றது.

தற்போது நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய வரவு செலவுத் திட்டம் வெளிநாட்டு திறனாளர்களையும், நிபுணர்களையும் கனடாவுக்குள் உள்வாங்கும் நடவடிக்கையினை துரிதப்படும் என்று மத்திய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் நவ்டீப் பெய்ன்ஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மத்திய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் நவ்டீப் பெய்ன்ஸ்,

“அறிவியலாளர்கள், மேதைகள், அதிஉயர் திறன் வாய்ந்த பணியாளர்கள் போன்றோர் அமெரிக்காவில் இருந்து கனடா நோக்கி நகர்வதற்கு சிந்தித்து வருகின்றனர்.

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளை நோக்கி தமது பார்வையைக் குவிக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே திறமைகளை வரவேற்றுவந்த கனடா தற்போது அவற்றை மேலும் தீவிரப்படுத்த வேண்டியுள்ளது.

வெளிநாட்டுப் பயணங்களின் போது அங்குள்ள திறன் வாய்ந்தவர்களை கனடாவுக்கு ஈர்க்கும் நடவடிக்கையை தமது பொறுப்பின் ஒரு பகுதியாக கொண்டுள்ளேன்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg