Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பை கோரும் நிக்கோலா

In
Updated: 11:10 GMT, Mar 31, 2017 | Published: 11:09 GMT, Mar 31, 2017 |
0 Comments
1203
icon_com
This post was written by : Elakkiya
sturgen

பிரித்தானியாவிலிருந்து ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்திற்கான இரண்டாவது வாக்கெடுப்பை நடத்துவதற்கு அனுமதி கோரி ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் பிரித்தானிய பிரதமர் தெரேசா மேக்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

பிரித்தானியாவிடமிருந்து ஸ்கொட்லாந்து சுதந்திரம் பெறுவதற்கான கருத்துக் கணிப்பை எதிர்வரும் 2018 அல்லது 2019 ஆம் ஆண்டிற்கு இடையில் நடத்துவது தொடர்பில், கடந்த செவ்வாய்க்கிழமை ஸ்கொட்லாந்து நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

எனினும் கருத்துக்கணிப்பை நடத்துவதற்கு பிரித்தானிய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்ற நிலையில், ஸ்கொட்லாந்து சட்டமன்ற உத்தரவை பெற்றுள்ள நிக்கோலா, பிரித்தானிய பிரதமர் தெரேசா மேக்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதம் இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் தேரேசா மேயிடம் கையளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg