Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரொரன்ரோவில் கூகைக்கட்டு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64ஆக உயர்வு

In கனடா
Published: 11:13 GMT, Mar 31, 2017 |
0 Comments
1108
icon_com
This post was written by : Anojkiyan
cba

ரொரன்ரோவில் அண்மையில் கூகைக்கட்டு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16ஆக இருந்த நிலையில், குறித்த எண்ணிக்கை தற்போது 64ஆக அதிகரித்துள்ளதாக ரொரன்ரோ பொதுச் சுகாதாரப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுள் பெரும்பாலானவர்கள் 18வயதிற்கும் 38வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்ற போதிலும், இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுள் ஆரம்ப பாடசாலை மற்றும் இடைநிலைப்பாடசாலையைச் சேர்ந்த 5 பேரும் அடக்குவர் என்றும் பொதுச் சுகாதாரப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ரொரன்ரோவின் மேற்கு பகுதியில் உள்ள மதுபான விடுதி ஒன்றுக்கு சென்றவர்கள் மூலமே கடந்த பெப்ரவரி மாதத்தில் இந்த நோய்ப் பரவல் ஆரம்பமானதாக கூறப்படுகின்றது.

இந்த நோய்த் தொற்று ஏற்படாது இருப்பதனை உறுதிப்படுத்துவதற்கு உள்ள ஒரேயொரு வழி தடுப்பூசிகளை உரிய காலப்பகுதியில் பெற்றுக்கொள்வதே என்ற வகையில், அனைவரும் உரிய முறையில் அந்த தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளதனை உறுதிப்படுத்துமாறும் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg