Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழர் பிரச்சினைக்கு நல்லாட்சி தீர்வு தராவிடின் போராட்டம் புதிய வடிவம் பெறும்: சம உரிமை இயக்கம்

In இலங்கை
Updated: 11:51 GMT, Mar 31, 2017 | Published: 11:07 GMT, Mar 31, 2017 |
0 Comments
1181
icon_com
This post was written by : Risha
kkkk

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சத்தியாக்கிரக போராட்டங்களில் ஈடுபட்டுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வு தராவிடின், புதிய வடிவில் போராட்டம் வெடிக்கும் என சம உரிமை இயக்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் 40ஆவது நாளாகவும் தீர்வின்றி தொடர்கின்றது. குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சம உரிமை இயக்கத்தினர் இன்றைய போராட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சம உரிமை இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், காணாமல் போனோர் விடயம், காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு பகுதிகளிலும் சத்தியாக்கிரக போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை போராட்டங்கள் தொடரும். அதேவேளை, இது தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் எவ்வித தீர்வையும் முன்வைக்க தவறும் பட்சத்தில் போராட்டம் புதிய மக்கள் பலத்துடன் புதிய வடிவம் பெறும்.

அதேவேளை, இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்குரிய பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், நல்லிணக்கம் எங்கே என்ற கேள்வி மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg