Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனேடிய அரசின் ஏற்றுமதி தொடர்பான எதிர்கால திட்டம் குறித்து டெனிஸ் டார்பி கருத்து

In கனடா
Updated: 11:22 GMT, Mar 31, 2017 | Published: 11:22 GMT, Mar 31, 2017 |
0 Comments
1191
This post was written by : Anojkiyan

கனேடிய அரசாங்கம் எதிர்வரும் எட்டு ஆண்டுகளின் மொத்த ஏற்றுமதியின் அளவினை 30 சதவீதத்தினால் அதிகரிக்க எதிர்பார்த்துள்ள நிலையில், இந்த எதிர்பார்ப்பை சாத்தியமாக்குவதில் பல்வேறு சவால்கள் காணப்படுவதாக கனேடிய உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் டெனிஸ் டார்பி தெரிவித்துள்ளார்.

கனடாவின் உற்பத்திகளில் 75 சதவீதமானவை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவருகின்ற நிலையில், வரிவிதிப்புகள் போன்றவற்றை உள்ளடக்கி அமெரிக்காவின் புதிய நிர்வாகம் கொண்டுவரக்கூடிய புதிய கொள்கைள் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் கனேடிய நிறுவனங்கள் எச்சரிக்கையாகவே தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க தொடங்கியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலதிகமாக முதலீடு செய்வது குறித்தும், ஏற்றுமதிகள் தொடர்பிலும் அவை யோசிக்கின்றன என்றும், பல நிறுவனங்கள் தங்களின் நடவடிக்கைகளின் வேகத்தை குறைந்துள்ளன என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg