Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இறால் ஃப்ரைட் ரைஸ்

In
Published: 11:49 GMT, Mar 31, 2017 |
0 Comments
1165
icon_com
This post was written by : Anojkiyan
Shrimp-Fried-Rice

தேவையான பொருட்கள்

உதிரியாக வடித்த சோறு – 2 கப்
இறால் – 250 கிராம் (சிறியது)
கேரட் – 3
பீன்ஸ் – 10
குடமிளகாய் – 1
வெங்காயத்தாள் – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் – சிறிது

செய்முறை

கேரட், பீன்ஸ், குடமிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும். இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள இறாலை போட்டு, 7-8 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதே வாணலியில் வெங்காயத் தாள் சேர்த்து சிறிது நேரம் வதக்கிய, பின் நறுக்கி வைத்துள்ள மீதமுள்ள காய்கறிகளைப் போட்டு நன்கு 5 நிமிடம் வதக்க வேண்டும். பின் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கி, வறுத்து வைத்துள்ள இறாலை சேர்த்து சிறிது நேரம் கிளறவும். கடைசியாக அதில் சாதத்தைப் போட்டு நன்கு கிளறி இறக்கினால், சுவையான இறால் ஃப்ரைட் ரைஸ் ரெடி!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg