Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Published: 16:06 GMT, Mar 31, 2017 |
0 Comments
1093
icon_com
This post was written by : Sivaguru Siva
_95403072_mediaitem95403071

மலேசியாவில் வைத்து கொடியவிசமூட்டலுக்கு உள்ளாக்கபட்டு கொல்லப்பட்ட வடகொரியரான கிம் ஜொங் நாமின் உடலம் இன்று வடகொரியாவை சென்றடைந்தது.

இதே போலவே வட கொரியாவிலிருந்து வெளியேறவிடாமல் தடுத்து வைக்கபட்ட மலேசியர்களும் இன்று மலேசியாவை சென்றடைந்தனர்.

வடகொரியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கான உடன்பாடுகளையடுத்தே இந்த நகர்வுகள் இடம்பெற்றன

கடந்த மாதம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து கிம் ஜொங் நாம் படுகொலை செய்யப்பட்டார்.

வடகொரிய அரசாங்கமே இந்தப் படுகொலைக்குப் பின்னால் இருப்பதாக மலேசிய அரசாங்கம் குற்றஞ் சாட்டியதையடுத்து வடகொரியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் ராஜதந்திர முறுகல்கள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

tech-brexit

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரிந்துசெல்லும் பிரெக்சிற் நகர்வை கையாள்வது தொடர்பான வழிகாட்டி வரைவு ஐரோப்பியஒன்றியத்தால் இன்று பிரெசெல்சில் வெளியிடப்பட்டது.

ஐரோப்பிய ஆணைக்குழுத்தலைவர் டொனால்ட் ரஸ்க் வெளியிட்ட இந்த வழிகாட்டிவரைவு தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளின் அங்கீகாரத்துக்காக அனுப்பிவைக்கபட்டுள்ளது.

ஒன்றியத்தின் 27 நாடுகளின் அங்கீகாரம் இந்தவரைவுக்குகிட்டினால் அதுவே பின்னர்  பிரெக்சிற் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் வழிகாட்டியாக மாறும்.

4554558_6_15d6_le-president-du-niger-mahamadou-issoufou_8ebe479be376f3013a921b72ef14f1c1

நைஜீரியாவில் பொக்கோ ஹராம் அமைப்புக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் தொடருமென பிரெஞ்சு அரசதலைவர் பிரான்சுவா ஹொலாந் உறுதியளித்துள்ளார்.

பிரான்சுக்கு விஜயம் செய்துள்ள நைஜர் நாட்டின் அரசதலைவருடன் இன்று பிரான்சுவா ஹொலாந் பேச்சுக்களை நடத்தியபோதே   இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவை பிரதான தளமாக கொண்டு இயங்கும் பொக்கோ ஹராம் அமைப்பின் பயங்கரவாத செயற்பாடுகளால் நைஜர் உட்பட்ட 5 ஐந்து நாடுகள் அச்சுறுத்தலை சந்தித்துவருகின்றன.

இந்தப்பிராந்தியத்தில் பொக்கோ ஹராம் அமைப்புக்கு எதிரான நடவடிக்கையில் சுமார் 4000 பிரெஞ்சு துருப்புகள் ஈடுபட்டுவருகின்றனர்.

_95405139_bb197ca8-c9d1-4dfa-bc8d-e3ef8bb0b3ba

பலஸ்தீனத்தின் மேற்குக் கரைப்பகுதியில் புதிய யூதக்குடியேற்றம் ஒன்றை அமைப்பதற்கு இஸ்ரேலிய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியமைக்கு ஐக்கிய நாடுகள் சபை வருத்தம் வெளியிட்டுள்ளது.

பலஸ்தீன நகரான நப்லசுக்கு அருகிலுள்ள குன்றுப்பகுதி ஒன்றிலேயே இந்த யூதக் குடியேற்றம் அமைக்கப்படவுள்ளது.

இஸ்ரேலின் இந்த முடிவை கண்டனம் செய்துள்ள பலஸ்தீன அதிகாரிகள் இந்த விடயத்தில் அனைத்துலக சமூகம் தலையிடவேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

_85788672_drone_pa

பிரித்தானியாவின் ஹீத்ரோ விமானநிலையத்தில் தரையிறங்க முற்பட்ட விமானம் ஒன்றுக்கு அருகில் பத்தாயிரம் அடி உயரத்தில் றோன் எனப்படும் ஆளில்லா கலம் ஒன்று பறந்து சென்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகவே றோன் எனப்படும் ஆளில்லாமல் இயக்கப்படும் சிறுவான்கலம் பத்தாயிரம் அடிஉயரத்தில் பறக்கும் வல்லமை கொண்டவை அல்ல. ஆயினும் ஹீத்ரோ விமானநிலையத்துக்கு அருகே இவ்வளவு உயரத்தில்  விமானத்துக்கு நெருக்கமாக பறந்த சம்பவம் விமானிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

றோன் கலங்கள் பயணிகள் விமானங்களுடன் மோதினால்  பேரழிவு விபத்து ஒன்றுக்கான சாத்தியங்கள் உள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg