Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியா- மலேசியா நாடுகளுக்கிடையில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின

In இந்தியா
Updated: 07:41 GMT, Apr 2, 2017 | Published: 07:41 GMT, Apr 2, 2017 |
0 Comments
1262
This post was written by : Shailu

இந்திய பிரதமர் மோடி மற்றும் மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் ஆகியோர் முன்னிலையில் இரு நாடுகளுக்கிடையே பல்வேறு துறைகளில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

6 நாள் சுற்றுப்பயணமாக கடந்த மாதம் 30ஆம் திகதி இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள மலேஷிய பிரதமர் நஜீப் ரஸாக், டெல்லி- ஹைதராபாத் இல்லத்தில் வைத்து பிரதமர் நரேந்திர மோடியை நேற்று (சனிக்கிழமை) சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார்.

இச்சந்திப்பின்போது, இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு கல்வி, விமானச் சேவை, விளையாட்டு உள்ளிட்ட பல துறைகள் தொடர்பாக 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியும், மலேசிய பிரதமர் நஜீப்பும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது கருத்து தெரிவித்த மோடி ‘இரு நாடுகளுக்கும் பொதுவான பல்வேறு சவால்களையும், பிரச்சினைகளையும் திறம்பட எதிர்கொள்வதற்காக, இரு தரப்பு ஒத்துழைப்பையும், வர்த்தக தொடர்புகளையும் மேலும் வலுப்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதார வளமை, நிலைத்தன்மை ஆகியவற்றை பராமரிப்பதில் இரு நாடுகளுக்கும் பெரும் பங்கு உள்ளது’ என்று தெரிவித்தார்.

நஜீப் ரஸாக் கூறுகையில் பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg