Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மனி விமான நிலையத்தில் இந்திய பெண் அவமதிப்பு: அறிக்கை கோருகிறார் சுஷ்மா!

In இந்தியா
Updated: 10:57 GMT, Apr 2, 2017 | Published: 10:51 GMT, Apr 2, 2017 |
0 Comments
1295
This post was written by : Shailu

இந்திய பெண்ணொருவர் ஜேர்மனி விமான நிலையத்தில் அவமதிப்பு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கோரியுள்ளார்.

ஸ்ருதி பஸப்பா என்ற பெண் தனது 4 வயது மகளுடன் பெங்களூரில் இருந்து கடந்த புதன்கிழமை ஜேர்மனியின் ஃபிராங்பர்ட் (Frankfurt) நகர் வழியாக ஐஸ்லாந்திற்கு பயணம் மேற்கொண்டார்.

இதன்போது, ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில் தன்னை தனி அறைக்கு அழைத்து சென்று உடையை களையக்கோரி சோதனைக்கு உட்படுத்தியதாக சம்பந்தப்பட்ட பெண் தனது முகப்புத்தகத்தின் வழியாக முறைப்பாடு தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, இச் சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐஸ்லாந்தில் உள்ள இந்தியத் தூதுவரிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கோரியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg