Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்ய மெட்ரோ தாக்குதலை தொடர்ந்து டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களின் பாதுகாப்பு அதிகரிப்பு

In இந்தியா
Updated: 06:21 GMT, Apr 4, 2017 | Published: 05:17 GMT, Apr 4, 2017 |
0 Comments
1301
This post was written by : Shailu

ரஷ்யாவிலுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பை தொடர்ந்து டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக 150 மெட்ரோ ரயில் நிலையங்களில் சுமார் 4,500 பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.

பயணிகளின் உடைமைகள் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அவற்றை ரயில் நிலையத்திற்குள் கொண்டுசெல்ல அனுமதிக்கப்படுகின்றன. மேலும், சி.சி.டி.வி. கமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில்  11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 45க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்நிலையில், ரஷ்யாவைப் போல இந்தியாவிலும் தாக்குதல் நடைபெறலாம் என்ற எச்சரிக்கையை தொடர்ந்தே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg