புதுக்குடியிருப்பு பகுதியில் சிசுவை எரித்து கொலை செய்த சந்தேகத்தில் தாய் கைது

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பகுதியில் பிறந்து ஒரு நாள் ஆன சிசுவை எரித்த பெண்ணொருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண் கணவனை பிரிந்து வாழ்ந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தை பிறந்துள்ளது. அதனையடுத்து, குழந்தையை வீட்டின் அருகில் உள்ள குப்பையில் போட்டு எரித்துள்ளார்.
இச் சம்பவத்தை அவதானித்த அப் பெண்ணின் மூத்த மகள் நேற்று (திங்கட்கிழமை) பாடசாலையில் ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் பொலிஸ் அவசர பிரிவான 119இற்கு ஆசிரியரால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலிஸாரால் சம்பந்தப்பட்ட பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு, எரிந்த நிலையில் காணப்பட்ட சிசுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்குமாறு சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு நீதவான் எஸ்.எம்.எஸ்.சம்சுதீன் உத்தரவிட்டுள்ளார்.